TallyPrime- இல் உடனடியாக இ-இன்வாய் எவ்வாறு உருவாக்குவது?

Generate-GST-e-invoicing-instantly-in-Tallyprime
|Updated on: September 4, 2023

இ இன்வாய்ஸ்களை உடனடியாக உருவாக்குவதில் இருந்து இ இன்வாய்சிங் ரிப்போர்ட் மூலம் அவற்றைக் கண்காணிப்பது மற்றும் இடையில் உள்ள அனைத்தையும் செய்வது வரை, உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவத்தை வழங்க TallyPrime அனைத்து சிறு சிறு விவரங்களிலும் கவனம் செலுத்துகிறது. இன்வாய்ஸை சேமிப்பதன் மூலம் IRN மற்றும் QR தானாகவே சேர்க்கப்படும் அளவிற்கு இது மிகவும் விரைவானது.

இ இன்வாய்ஸிங் என்றால் என்ன?

சுருக்கமாக, இ-இன்வாய்சிங் என்பது உங்கள் அனைத்து B2B பரிவர்த்தனைகளையும் (விற்பனை, வணிகங்களுக்குச் செய்யப்பட்ட கிரெடிட் நோட் மற்றும் டெபிட் நோட்ஸ் அனைத்து வகையான ஏற்றுமதிகள் உட்பட) IRP (இன்வாய்ஸ் ரெஜிஸ்ட்ரேஷன் போர்டல்) அங்கீகாரத்திற்காக பதிவேற்றும் செயல்முறையாகும். அங்கீகரிக்கப்பட்டவுடன், IRP ஒவ்வொரு இன்வாய்சுக்கும் ஒரு தனித்துவமான IRN-ஐ வழங்கும்(இன்வாய்ஸ்ரெஃபரன்ஸ் நம்பர்). இன்வாய்ஸில் IRN-உடன் கூடவே ஒரு QR குறியீடும் சேர்க்கப்படும்.

TallyPrime

எங்களின் உடனடி மற்றும் குறைந்த செலவிலான மின்-விலைப்பட்டியல் தீர்வுகள் மூலம் மின்-விலைப்பட்டியலை எளிதாக உருவாக்கலாம்!

TallyPrime, இந்தியாவின் மிகச் சிறந்த இ இன்வாய்ஸ் சாஃப்ட்வேர்

தொழில்கள் இ இன்வாய்சிங் சிஸ்டம், -இற்கு சுமுகமாக மாறுவதற்கு உங்கள் பிசினஸ் மேனேஜ்மெண்ட் சாஃப்ட்வேர் IRP போர்ட்டலுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியமாகும். Tally அங்கீகரிக்கப்பட்ட GSP (GST சுவிதா புரொவைடர்) என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும், அதாவது இது இ இன்வாய்ஸ்களை தடையின்றி உருவாக்க, TallyPrime நேரடியாக IRP போர்ட்டலுடன் ஒருங்கிணைவதை உறுதி செய்கிறது.

  • TallyPrime மூலம் உங்கள் இன்வாய்ஸ்களை நேரடியாக IRPக்கு அனுப்பலாம்
  • IRP ஆல் அங்கீகரிக்கப்பட்டதும், TallyPrime IRP-இடமிருந்து நேரடியாக IRN மற்றும் QR குறியீட்டைப் பெற்று அதற்கேற்ப உங்கள் இன்வாய்ஸ்களைப் புதுப்பிக்கும். இவை அனைத்தும் தானாகவே நடக்கும்
  • உங்கள் இன்வாய்ஸில் உள்ள IRN மற்றும் QR குறியீட்டை பிரிண்ட் செய்தால் போதும்.

TallyPrime-இல் இ இன்வாய்ஸ்களை மொத்தமாக உருவாக்குவது

TallyPrime’s e-invoice solution-இன் அம்சங்கள்

இது முற்றிலும் புதிய அனுபவம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், நீங்கள் அதைப் பழக்கப்படுத்திக்கொள்ள நேரம் எடுக்கும். மேலும், இ இன்வாய்ஸ் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டியிருக்கும் போது நீங்கள் வெவ்வேறு சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடலாம். செயல்முறை வசதியானதாகவும் உங்கள் வசதிக்கு ஏற்றதாகவும் இருக்கும் வகையில் TallyPrime தயாரிப்பை மிகவும் நெகிழ்வானதாக மாற்றியுள்ளது.

உங்கள் தேவைகளை கவனித்துக்கொள்ளும் TallyPrime இன் இ-இன்வாய்சிங் தீர்வின் சில சிறந்த அம்சங்கள் இதோ:

  • உடனடி இ இன்வாய்ஸ்
    TallyPrime இன் முழுமையாக இணைக்கப்பட்ட இ இன்வாய்ஸ் தீர்வு மூலம், கைமுறையாக எதுவும் செய்யத் தேவையில்லை, ஆகையால் உடனடியாக இ இன்வாய்ஸ்களை உருவாக்கலாம். இன்வாய்ஸை பதிவுசெய்து பிரிண்ட் செய்தால் போதும், TallyPrime தானாகவே IRN மற்றும் QR குறியீட்டைச் சேர்க்கும்.
  • ஒற்றை அல்லது மொத்த மின்-விலைப்பட்டியல்
    இன்வாய்ஸ் பதிவுசெய்யும் போது நீங்கள் இ இன்வாய்ஸ் ஒன்றை உருவாக்கலாம் அல்லது பல இன்வாய்ஸ்களுக்கு மொத்தமாக இதைச் செய்யலாம். TallyPrime உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாறும்

  • இ-வே பில் உடன் இ இன்வாய்ஸ்

    உங்கள் சப்ளைக்கு இ-வே பில் தேவைப்பட்டால், இ-இன்வாய்ஸ் விவரங்களைப் பெறும் செயல்பாட்டில் TallyPrime தானாகவே இ-வே பில் உருவாக்கும்.

  • ஆன்லைன் இ இன்வாய்ஸ் ரத்துசெய்தல்

    இ இன்வாய்ஸை ரத்து செய்யவேண்டிய சூழலில், நீங்கள் TallyPrime-இல் இருந்து சுலபமாக ரத்துக் கோரிக்கையை அனுப்பலாம்.

  • ஆஃப்லைன் மோடை ஆதரிக்கிறது

    இ இன்வாய்ஸை உருவாக்க நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் கணினியின் இணைய இணைப்பு துண்டிக்கப்படும் சாத்தியம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், JSON கோப்பின் வடிவத்தில் இ இன்வாய்ஸ் தொடர்பான தரவை ஏற்றுமதி செய்வதன் மூலம் TallyPrime உங்களுக்கு அந்தச் சூழலைக் கையாள உதவும்.

  • இ இன்வாய்ஸ் ரிப்போர்ட்கள்

    TallyPrime இன் பிரத்தியேக ரிப்போர்ட், இ இன்வாய்ஸ் தொடர்பான உங்கள் பரிவர்த்தனைகளின் நிலையைப் பற்றிய முழுமையான பார்வையை உங்களுக்கு வழங்கும். முடிக்கப்பட்டவை, நிலுவையில் உள்ளவை, ரத்து செய்யப்பட்டவை போன்றவற்றை நீங்கள் பார்க்கலாம்

  • பயனுள்ள அலர்ட்கள்

    பயனுள்ள அலர்ட்கள் பயனில்லாதவற்றைத் தடுக்கவும், சமீபத்திய தரவு இ இன்வாய்ஸ் போர்ட்டலுடன் பகிரப்படுவதை உறுதிசெய்யவும் பல பயனர் சூழ்நிலைகளில் விழிப்பூட்டல்கள் கிடைக்கும். மேலும், ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்ட IRN-இன் தற்செயலான மாற்றம்/நீக்கம்/ரத்துசெய்யப்படுவது ஆகியவற்றில் இருந்து பாதுகாக்க உங்களுக்கு உதவுகிறது.

TallyPrime-இல் உடனடியாக இ-இன்வாய்ஸ் உருவாக்குவது எப்படி?

TallyPrime வைத்து இ இன்வாய்ஸ் uருவாக்குவது மிகவும் சுலபமானது ஒரு முறை அமைத்தால் போதும், அதன் பிறகு இ இன்வாய்ஸ்களை சில நொடிகளில் உருவாக்கி பிரிண்ட் செய்யத் தொடங்கலாம் நீங்கள் இப்போது வேலை செய்துகொண்டிருக்கும் முறையை நீங்கள் மாற்றவே தேவை இல்லை. TallyPrime நீங்கள் வேலை செய்யும் பாணிக்கு ஏற்ப மாறி வெறும் 3 ஸ்டெப்களில் உங்கள் முறையில் ரிப்போர்ட்டுகளை உருவாக்கும் நெகிழ்ச்சியை உங்களுக்கு வழங்கும். இயக்குங்கள், பதிவு செய்யுங்கள் மற்றும் பிரிண்ட் செய்யுங்கள்.

  • முதலில், பொருந்தும் இ இன்வாய்சிங் என்பதை ‘ஆம்’.. என அமைக்கவும் பொருந்தினால், இ வே பில் என்பதையும் ‘ஆம்’ என அமைக்கவும்

  • Tallyயில் நீங்கள் வழக்கமாகச் செய்வது போன்ற வவுச்சர் உள்ளீட்டைப் பதிவு செய்து/பாஸ் செய்து, திரையை ஏற்றுக்கொண்டவுடன், இ இன்வாய்ஸ் ஒன்றை உருவாக்க விரும்புகிறீர்களா எனக் கேட்கும் செய்தியுடன் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். 'ஆம்'என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தவுடன், TallyPrime IRP சிஸ்டமுடன் தொடர்புடைய தரவைப் பரிமாறிக் கொள்ளும், விரைவில் அனைத்து பரிவர்த்தனை விவரங்களும் தானாகவே IRP இல் புதுப்பிக்கப்படும்
  • பிரத்யேக QR குறியீடு மற்றும் IRN உடன் நீங்கள் பெறக்கூடிய இறுதி இ இன்வாய்ஸ் கீழே உள்ளது.

ஆம், இது மிகவும் எளிமையானது!

TallyPrime உடன் இணைக்கப்பட்ட இ இன்வாய்ஸ் அனுபவத்தை அனுபவித்து மகிழவும்! இன்றே இலவச சோதனை ஐப் பெற்று எங்களது ஒப்பிடமுடியாத தடுக்கும், கண்டறியும் மற்றும் திருத்தும் திறன்களை அனுபவித்து மகிழுங்கள்.

பார்க்கவும்: TallyPrime இல் உடனடியாக இ இன்வாய்ஸ்கள் உருவாக்குவது எப்படி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

TallyPrime இல் இ-இன்வாய்ஸை எவ்வாறு இயக்குவது?

மூன்று விரைவான ஸ்டெப்களில் TallyPrime இல் இ இன்வாய்ஸை செயல்படுத்தப்படலாம்:

  • Alt+G (கோ டு) > ஆல்டர் மாஸ்டர் > வவுச்சர் வகை > சேல்ஸ் என டைப் செய்க > Enter அழுத்தவும் மாற்றாக, கேட்வே ஆஃப் Tally> ஆல்டர்> வவுச்சர் வகை> சேல்ஸ் என டைப் செய்க அல்லது தேர்ந்தெடுக்கவும் > Enter ஐ அழுத்தவும்.
  • விற்பனைக்கான வவுச்சர் வகை மாற்றியமைத்தல் திரையில், இ-இன்வாய்சிங்கை அனுமதி என்பதை ஆம் என அமைக்கவும்.
  • திரையை ஏற்க Y ஐ அழுத்தவும்.
TallyPrime

எங்களின் உடனடி மற்றும் குறைந்த செலவிலான மின்-விலைப்பட்டியல் தீர்வுகள் மூலம் மின்-விலைப்பட்டியலை எளிதாக உருவாக்கலாம்!